Thursday 1 September 2016

வஹாபியிச வெறியன் ஜாகிர் (1)

எல்லோரும் ஜாகிர்நாய்க் பற்றி எழுதிவிட்டார்கள் நான் எழுதவில்லைன்னா அந்த அல்லாவின் சாபத்தை சுமக்க வேண்டி வரும் அதிலும் அல்லாஹ் பிற மதங்களில் இருப்பதுபோல் "வெறும்" கடவுள் மட்டும் அல்ல கூடுதலாக சூழ்ச்சிக்காரனும் ஆகிறான் அதனால் நமக்கு எதுக்கு வம்பு முஸ்லிம் நாடானா பங்களா தேஷிலேயே அல்லாஹ்வின் சூழ்ச்சியால் ஜாகிருக்கு தடை போட்டுவிட்டான் அப்படியிருக்க இந்த நஜீஸ் காஃபீர் இந்தியாவில் அல்லாஹ்வின் சூழ்ச்சியும் வேதனையும் எப்படி இறங்குமோ யார் அறிவார் !! ஏற்கனவே 1992ல் அல்லாஹ்வின் சூழ்ச்சியால் அல்லா தன் வீட்டை இடித்தானே
(அண்ணே அது ரொம்ப பழைய வீடுன்னே அதுதான் இடிச்சுப்புட்டான்)
யோவ் யாருய்யா அது குறுக்காலெ ஷைத்தானா மூக்குலே பூறுரது ... சரி பதிவெ கவனிங்க!
முதலில் ஒரு கேள்வி
சாகிர் நாயக் முழு இஸ்லாமிய உம்மத்தின்/மக்களின் அடையாளமா? என்றால் இல்லவே இல்லை இஸ்லாமிய பல பிரிவுக்குள் அவரும் ஒரு அடையாளம் அவ்வளவுதான்.
இன்று இவருக்காக குரல் கொடுக்கும் முஸ்லிம்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் அனைவரும் வஹாபிய சிந்தனையாளர்களே இவர்கள் குரல் கொடுப்பது ஜாகிருக்காக அல்ல அவரின் வஹாபிய சிந்தனைக்காக வஹாபி சிந்தனை என்றால் முஹம்மதின் அடிப்படைவாதம் என்று பொருள்.
ஜாகிர் நாயக்கைப் பொறுத்தவரையில் அவர் தீவிரவாதத்தை நேரடியாக ஆதரிப்பவரா என்றால் இல்லை ஆனால் தூயவாத முஹம்மதிய அடிப்படைவாதத்தை குரான் ஹதீத்மூலம் பரப்புகிறார் அதனால் அவர் சார்ந்த வஹ்ஹாபிச சிந்தனைத்துவம் தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியது என்பதை இஸ்லாத்தின் மற்றொரு பெரும் பிரிவான. சுன்னத் வல் ஜமாத்தினர் கூறுகின்றனர். அதேபோல் முஸ்லிகள், வாஹாபிய பிரிவினர் போராட்டம் நடத்தும் அளவுக்கு ஜாகிர் நாயக் ஒன்றும் இஸ்லாமியபுரட்சியாளனும் அல்ல. பிறகு ஏன் தமிழக வஹாபிய பிரிவில் ஒன்றான பிஜை குருப் வரிந்து கட்டிக்கொண்டு போராட்டம் நடத்த களம் இறங்குகிறார்கள். என்பதை நாம் தெரிந்துக்கொள்வது அவசியம்
சாகிர் நாயக்கைப் பொறுத்தவரையில் அவர் மருத்துவ துறையில் பட்டம் பெற்ற ஒரு டாக்டர். ( பிறகு ஏன் மதம் பரப்பவந்தார் என்பதை அவருடைய ரசிகர்கள் கூறலாம் ).
விவாத வித்தகர் அஹமத் தீதாத் (ஜாகிர் மற்றும் பிஜைக்கும் இந்த அஹ்மத் தீதாத் தான் விவாத கலைக்கு முன்னோடி). இவர் வாஹாபிய சிந்தனை சார்ந்தவரல்ல ஓர் சுன்னத் வல் ஜமாத்காரர். தீதாதை தன்னுடைய குருவாக பிரகடனப்படுத்திவரக்கூடிய சாகிர் நாயக் வஹ்ஹாபிசம் என்ற நச்சு மரத்தின் ஓர் கிளையாகவே செயற்பட்டு வருகிறார். இதற்காகவே சௌதி இவருக்கு பல விருதுகளை தந்து சிறப்பித்துள்ளது. இந்தியாவில் இஸ்லாமிய தோற்றமே சுன்னத் வல் ஜாமத்தின் தோற்றம் தான் கிட்டதட்ட 900 ஆண்டுகால இந்திய இஸ்லாமிய கலாச்சாரத்தை இந்த வஹாபிஸம் அழித்துவருகிறது. அதன் விளைவாகவே சுன்னத்வல் ஜமாத்தினர் ஜாகிருக்கு ஆதரவாக களம் இறங்கவில்லை சுன்னத் ஜமாத்தினர் ஜாகிர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள்: சுன்னத் வல் ஜமாத்தின் தசவ்வுப் என்ற சூபித்துவ ஞானத்தை எதிர்ப்பவர்; ஜாகிர் நாயக் சூபித்துவத்துக்கெதிராக தன் குரலை உயர்த்துகிறார்; அது போல பிக்ஹ் விடயத்திலும் எதிர்கிறார்; மத்ஹபுகளுக்கெதிராக பிரச்சாரம் செய்கிறார் என்கிறார்கள். ஆனால் ஜாகிர் மதஹப்களை முழுமையாக எதிர்ப்பதாக தெரியவில்லை அடுத்து சுன்னத் ஜமாத்தார் குற்றம் சுமத்துவது ,பெரும்பாலான முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரக்கூடிய மௌலிதுந் நபி, வஸீலா, கத்தமுல் குர் ஆன், தராவீஹ், தஸ்பீஹ், மிஃராஜ், பரா அத் போன்ற வழிபாட்டு முறைகளை மறுத்துவருவதுடன் தர்ஹாக்களை இடிக்க வேண்டும் என்கிற வஹ்ஹாபிச சிந்தனைப் பள்ளியின் ஏஜெண்டாகவும் செயற்பட்டுவருகிறார் என சுன்னத் ஜமாத்தார் குற்றம் சுமத்துகிறார்கள். இவர்கள் இப்படி குற்றம் சுமத்த நம்ம டவ்ஹீத் பாய்ஸ் ஆன பிஜைகளோ ஜாகிரை அரபி ஞானம் இல்லாத அரைகுறை சூனியத்தை நம்பும் முஷ்ரிக் என்கிறார்கள்
ஜாகிர் நாயக்கிற்கு மார்க்கம் சொல்ல எவ்வித அருகதையும் தகுதியும் கிடையாதென்பதே பிஜைகளும் சுன்னத்ஜமாத்தாரின் கருத்தாகவும் இருக்கிறது.
சாதாரணமாக அவரது பேச்சுக்களைக் கவனித்தால் குர் ஆன் வசனங்களை உச்சரிப்பதில் கூட தவறிழைப்பவராகவும் ஹதீதுகளின் அர்த்தம் புரியாமல் திரித்துக் கூறக்கூடிய ஒருவராகவும் மார்க்க சட்டங்களில் அறிவற்றவராகவுமே அவரை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
சாகிர் நாயக் மாற்று மதத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய நிகழ்வுகளில் இந்து மத பாமரர்களும் பாமர முஸ்லிம்களும் அவரை மார்க்க அறிஞர் என்று சொல்லக்கூடிய அவருக்கு தகுதியற்ற உயர்ந்த அந்தஸ்த்துக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறது. ஆனால் அவரது பதில்களையும் கேள்வி கேட்பவருடன் அவர் நடந்துகொள்ளும் விதத்தையும் கூர்ந்து நோக்குகையில் சிந்தனையாளர்களிடையே ஒருவித சலிப்பையும் வெறுப்பையும்தான் அவை ஏற்படுத்துகின்றது.
கேள்வி கேட்பவர் தன்னை சிக்கலில் மாட்டிவிடப் போகிறார் என சாகிர் நாயக் உணர்ந்தால் கேள்வி கேட்பவரை ஏளனம் செய்வதும் அவரது கேள்வியை பூரணப்படுத்த வாய்ப்பு மறுப்பதும் கோபம் கொள்வதும் சாகிர் நாயக்கின் வழக்கமாக இருந்துவருகிறது. இதற்கு பல நிகழ்வுகள் வீடியோவாக யுடியூபில் அல்லாஹ்வின் சூழ்ச்சியால் உலவுகிறது. அதேபோல் எளிமையான இஸ்லாம் என்ற போர்வையையும் ஜாகீர் கிழித்தெறிந்துள்ளார்
ஜாகிர் நாயக்கினால் பல லட்சம் செலவு செய்து சினிமா செட்டுக்கள் போல மேடை அமைக்கப்பட்டு நடாத்தப்பட்டு வரக்கூடிய அவரது போதனை நிகழ்வுகளில் ஒரு சிலர் இஸ்லாத்தை ஏற்பது போலவும் அவர்களுக்கு சாகிர் நாயக் கலிமா சொல்லிக்கொடுப்பது போலவும் காட்சிகள் காட்டப்படுகிறது. இவைகள் ஜோடிக்கப்பட்டவைகளா என்ற சந்தேகங்கள் உண்டாகமலில்லை அவைகளை உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் இஸ்லாத்தை ஏற்பவர் ஜாகிர் நாயக்கின் பேச்சையும் பதிலையும் இஸ்லாமாக ஏற்றுக்கொண்டாரே தவிர அவை ஒருபோதும் இஸ்லாம் கூறும் போதனைகளின்பாலான ஏற்பு அல்ல. ஏனெனில் இஸ்லாத்திற்கு மதம்மாறும் அனைவரும் ஜாகிர், போன்ற முல்லாகளின் கவர்ச்சிவார்த்தைகளுக்கு வசீகரிக்கப்பட்டே மதம் மாறுகிறார்களே தவிர மூல இஸ்லாமிய நூல்களை படித்தோ ஆய்ந்தோ மதம் மாறுவதில்லை அப்படி படித்தால் எவனும் முஸ்லிமாக மதம் மாற விரும்ப மாட்டான் இது ஜாகிருக்குமட்டும் அல்ல பிஜை போன்ற அனைத்து முல்லாக்களுக்கும் தெரியும்.
மேலும் சாகிர் நாயக், பிஜை போன்ற முல்லாக்களின் நிகழ்வுகளில் இஸ்லாத்தை ஏற்போர் தொடர்ந்தும் முஸ்லிம்களாக வாழ்கின்றனரா என்பதை இவர்களால் உறுதியிட்டு கூற முடியாது
சாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் சகிப்புத்தன்மையற்ற மத நிந்தனைக்கருத்துக்களை வைத்தே இந்துவ அடிப்படைவாதிகளும் பாமர முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சாரங்களை பொதுமக்கள் மத்தியில் விதைத்துவருகின்றனர் என்பதும் கவலைக்கிடமான விடயமாகும். இங்கு நாம் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ளவேண்டும் முஹம்மத்திய அடிப்படைவாதத்தை எதிர்ப்பது வேறு முஸ்லிம்களுக்கெதிராக வெறுப்புணர்வை உமிழ்வது வேறு பாமர தனி முஸ்லிம்களின் சிந்தனை மாற வேண்டும் என்றால் முஹம்மத்திய அடிப்படைவாதத்கெதிராக குரல் எழுப்புவது சமூக அக்கரையாளர்களின் கடமையும் கூட

(தொடரும்)

Facebook Comments

4 கருத்துரைகள்:

Ant said...

//இதற்கு பல நிகழ்வுகள் வீடியோவாக யுடியூபில் அல்லாஹ்வின் சூழ்ச்சியால் உலவுகிறது.//
//அவரது போதனை நிகழ்வுகளில் ஒரு சிலர் இஸ்லாத்தை ஏற்பது போலவும் அவர்களுக்கு சாகிர் நாயக் கலிமா சொல்லிக்கொடுப்பது போலவும் காட்சிகள் காட்டப்படுகிறது. இவைகள் ஜோடிக்கப்பட்டவைகளா என்ற சந்தேகங்கள் உண்டாகமலில்லை.//
//https://www.youtube.com/watch?v=zUT8ak_M71I// From time 1:17 திருக்குரானை விளங்கிக் கொள்ள வி‌ரிவுரையை பார்க்க வேண்டுமாம். அப்ப முழுமையான புத்தகம் இல்லை என்பது தானே பொருள்.
//https://www.youtube.com/watch?v=4u65yrxdpf0// From time 5.25 ”யாருக்கும் தெரியாத ஒரு இயந்திரத்தின் இயக்கத்ததை குறித்து யாரல் சரியாக சொல்ல முடியும்? என்று கேட்கிறார்” அதற்கு அ்த பகுத்தறுவாதியாக கூறிக்கொள்ளும் நபர் ”படைப்பாளன்” என கூறுகிறார். 50 லிருந்து 100 விஞ்ஙான குறிப்புகள் அதுவும் மனிதர்களுக்கு தெரியாக குறிப்புகள் என்று கூறுகிறார். அதுமட்டுமல்ல எந்த எதிர்கேள்வியும் இல்லாது ”ஒரு இறைவன் ” என்பதையும் நம்புவதாக குறிப்பிடுகிறார் (இதுகுறித்து சாகிர் எதையும் நிறுபிக்வோ விளக்கவோ இல்லை)
முதலாவது:
”யாருக்கும் தெரியாத ஒரு இயந்திரத்தின் இயக்கத்ததை குறித்து யாரல் சரியாக சொல்ல முடியும்? என்று கேட்கிறார்” எந்த ஒரு பகுத்தறிவுவாதியும் ”இயந்திரம் என்ற ஒன்று இல்லை” எனபதுதான் சரியான பதிலாக இருக்க முடியும் ஆனால் பகுத்தறிவுவாதியாக அறியப்பட்டவன் படைப்பாளன் என்று வினாடிவினாவில் சரியான பதிலளித்ததுபோல் கூறுவது Pre-suppositional கேள்வி காரணமாகவே.
இரண்டாவதாக:
மனிதர்களுக்கு தெரியாத குறிப்புகள் என்று தங்களால் உணர்ந்து கொள்ள பட்டவைகளை கூறுவது வேடிக்கை.
மூன்றாவதாக:
ஏக இறைவனை பற்றி எந்த விவாதமும் இல்லாமல் உடனடியாக இதுவும் முக‌ைமதை அவரின் துர்தர் என்றும் உடனடியாக ஏற்றுக் கொள்வாதக கூறுவது ஒரு திட்டமிட்ட நாடகத்தின் வெளிப்பாடகவே உள்ளது.
அரபுமொழி படிப்பறிவில்லாதவர் குரான் வசம் கூறுவதை time: 7.25 ல் இருந்து காணலாம்.
//https://www.youtube.com/watch?v=z1vQMOfVvAg
https://www.youtube.com/watch?v=yIOyo6N6nE4//
அரபு மொழி பைபிள் இலை்லை அதனால் காப்பி இல்லை என்ற நேர்மாறான பதிலை இந்த வீடியோவில் காணலாம். இவர் சாகிரை அமைதியாக ஆப்பு வைத்துவிட்டார் என்று கூறலம்.

Ant said...

//https://www.youtube.com/watch?v=O7yKiAbM5MY//
தியரி என்றால் என்ன என்று தெரியாமல் கேள்வி கேட்டு மடக்கியவரை ஒன்றும் தெரியாதவர் என்று மட்டம் தட்ட தான் அறிவாளி என்பது போல் காட்டிக் கொள்கிறார்.
Atheist - ஆக கேள்வி கேட்டவர் உண்மையில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.
//இஸ்லாத்திற்கு மதம்மாறும் அனைவரும் ஜாகிர், போன்ற முல்லாகளின் கவர்ச்சிவார்த்தைகளுக்கு வசீகரிக்கப்பட்டே மதம் மாறுகிறார்களே தவிர மூல இஸ்லாமிய நூல்களை படித்தோ ஆய்ந்தோ மதம் மாறுவதில்லை//
பதில் திருப்திகராமாக இருந்தால் இஸ்லாமிற்கு வருவீர்களா என்பதை மறவாமல் கேட்கிறார்.
Structured presupposition questions மூலம் எதிராளிக்கு அவர்தரப்பு வாதத்தை முன் வைக்க வழி ஏற்படுத்தாமல் தனது கேள்விக்கு பதிலளிக்க வைத்து திசை திருப்புவதையும் காணமுடிகிறது.

Ant said...

ஜாகீர் நாயக் போலி / சந்தர்ப்பவாத வாதங்களை தோலுரிக் வேண்டிய நேரம் தங்கள் கட்டுரையின் வழியாக தொடங்கியுள்ளதாக அறிகிறேன்.
விவாதிப்போம்.
வாழ்த்துகளுடன்.

Ant said...

https://www.youtube.com/watch?v=V_7VUwSc_JY&spfreload=5
பொது வெளியில் பெண்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தால் அவரால் பேச இயலாது என் அவரே ஒத்துக் கொண்ட கானொலி.
பாதி வனத்தை பார்த்தும் பாதி தரையை பார்த்ததும் தான் பேசினாராம்.
பெண்கனை நேருக்கு நேர் பார்த்து பேசவே தெரியாதா? இவருக்கு.
முஸ்லிம்களின் திருமணத்திற்கு முஸ்லீம் அல்லாதவர்கள் சாட்சியாக இருக்க முடியாது என்பதை கூறுவதை விட்டு அல்லாவையும் முகம்மதையும் நம்பினால் மட்டுமே சாட்சியாக இருக்க முடியும் என்று சுத்தி வளைத்து பேசுவது இஸலாமின் உண்மை முகம் வெளிப்பட்டுவிடும் என்ற பயமே.